Categories
உலக செய்திகள்

என்ன…! சமூக வலைதளப் பக்கங்கள் மக்களை கொல்கிறதா…? தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டும் பொதுமக்கள்…. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அதிபர்….!!

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பரவும் கொரோனா குறித்த தவறான கருத்தாலயே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளின் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த கொடூர நோய்த்தொற்றின் பிடியிலிருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் கொரோனா குறித்த தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதேபோல் அமெரிக்க நாட்டில் பெரும்பாலான மக்கள் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வைத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ஃபேஸ்புக் போன்ற மற்ற சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்தும், அதற்காக போடப்படும் தடுப்பூசி குறித்தும் தவறான தகவல் பரவுவதாலயே பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள் என்றுள்ளார். மேலும் அவர் இவ்வாறான தவறான கருத்துக்களை சமூக வலைத்தள நிறுவனங்கள் பரப்புவதால் அவர்களே மக்களை கொல்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |