பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் பெயிண்ட் அடிப்பதற்கு தனது வீட்டின் போர்டிகோ மேலே ஏறியுள்ளார். அப்போது ராமச்சந்திரன் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காரைக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.