Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தச்சு வேலைக்கு சென்ற தொழிலாளி…. விழுந்ததால் நடந்த விபரீதம்…. திருப்பூரில் சோகம்….!!

கால் தவறிக் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அண்ணா நகர் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்தார். இவர் தச்சு தொழிலாளியாக இருந்துள்ளார். இதனால் தண்டபாணி க.அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரது வீட்டில் தச்சு வேலைகள் செய்து வந்தார். அப்போது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக தண்டபாணி படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழுந்து விட்டார்.

இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட தண்டபாணியை அருகில் இருப்பவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தண்டபாணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |