அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொங்கல் அன்று நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று ஏற்கனவே பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த திரைப்படம் தற்போது வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தயாரிப்பாளரான போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பு வெறும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பாக மட்டுமல்லாமல், திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவி வெளியிடுவதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ”வாரிசு” திரைப்படத்துடன் மோத உள்ளது.
Wow! News of the year! Ajith sir and @BoneyKapoor once again Pongal 2023! All the best! pic.twitter.com/9XwGoWMuRY
— Dhiraj Kumar (@AuthorDhiraj) October 28, 2022