மது அருந்துவதற்கு பணம் அளிக்காததால் மகன் தனது தாயை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியில் அம்பிகா என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மணியரசு என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் மணியரசு தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதைப்போல் நேற்று மணியரசு தனது தாயிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து பணம் தருவதற்கு மறுத்த தனது தாயை கத்தியால் மணியரசு குத்தியுள்ளார். அதன்பின் அம்பிகா வலியால் துடித்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாங்காடு காவல்துறையினர் மணியரசை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.