தாயை தாக்கிய மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 4 மாதத்துக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திருமணம் ஆனதிலிருந்து முத்துக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனை தாய் கஸ்தூரி முத்துக்குமாரை தட்டிக் கேட்டுள்ளார். இதனையடுத்து முத்துக்குமார் கஸ்தூரியை அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கஸ்தூரி பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.