நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்ல தயக்கமா..? உங்கள் காதல் வெற்றி பெற வேண்டுமா..? இப்படி செய்து பாருங்களேன்…
பெண்ணின் கண்களை பார்த்தால், நீங்க கூறவிரும்பும் வார்த்தைகள் அனைத்தும் மறந்துபோய்விட கூடும். ஆனா கண்களை பார்த்து தெளிவாக காதலை கூறுங்கள், உங்கள் மனதில் வேறு ஒரு பொன்னாக நினைத்து கொண்டு அந்த ஒரு நிமிடம் மட்டுமே, பயம் இல்லாமல் தெளிவாக காதலை சொல்லலாம்.
ஒரு பெண்ணை விரும்புவதை எளிதாக செய்துவிடும் ஆண்களுக்கு, அதனை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்துவதில் சற்று தயக்கத்துடன் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஆண்கள் வெற்றிகரமாக தங்கள் காதலைச் சொல்ல சில
நீங்கள் நீங்களாக இருங்கள். காதலை சொல்லப் போகிறீர்கள் என்பதற்காக உங்கள் காதலியிடம் வித்தியாசமாக நடந்து கொள்ளாதீர்கள். இயல்பாக பேசுங்கள்.
மெழுகுவர்த்திகள் சூழ ஒரு டின்னருக்கு உங்கள் காதலியை அழைத்துச் சென்று காதலை சொல்வது, ஒரு கிளாசிக் ரகமாகவே இன்று வரை பார்க்கப்பட்டு வருகிறது. சிலருக்கு அது வெற்றியிலும் முடிகிறது.
நீங்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்த இடம் குறித்து, உங்கள் இருவருக்குமே சில இனிமையான நினைவுகள் இருக்கும். அந்த இடத்தில் உங்கள் காதலை சொல்வது வெற்றியில் முடியும்.
ஸ்பெஷல் நாட்களில் காதலை சொல்வது சிறப்பானதாக அமையும். அது காதலர் தினமாகவோ, அல்லது வேறு சில பண்டிகை நாட்களாகவோ இருக்கலாம்.
டி சர்ட் பிரபோசல் என்பது சமீபகாலமாக காதலர்களிடையே பரவி வருகிறது. தங்கள் காதலை டீ சர்ட்டில் எழுதப்பட்ட வாசகங்கள் மூலம் வெளிப்படுத்துவதும் நல்ல வெற்றியைத் தரும்.
ஒரு நாள் அளவிலான சுற்றுலாவுக்கு உங்கள் காதலியை அழைத்துச் சென்று, உங்கள் காதலி மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் போது உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் காதலை சொல்லும் முன் அந்த பெண்ணுக்கு உங்கள் மீது நம்பிக்கை வர வேண்டும் அதற்கு சுயநலமில்லாமல் அந்த பெண்ணை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நண்பனாகவும் ,தகப்பனவாகவும் புரிந்து அந்த உறவாக பழக கற்று கொள்ளுங்கள், மனதில் உள்ள காதலை அந்த பெண்ணிடம் தயக்கம் இன்றி தெளிவாக கூறுங்கள். வாழ்க்கை முழுவதும் பார்த்து கொள்வேன் என்று இனம்புரியாத நம்பிக்கை அன்பு அந்த பெண்ணின் மனதிற்குள் தோன்றுமாறு தெளிவாக பேசுங்கள்.
அவளின் குணத்தை உங்களால் புரிந்து கொள்ளமுடிந்தால் மட்டுமே காதலை எந்த விதத்தில் சொல்லலாம் என்ற யோசனை தோன்றும். பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசுங்கள்.