மனைவியை திட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தாயின் வாயில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஏனங்குடி பகுதியில் வீரமோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் உள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கஸ்தூரி தனது மருமகள் வினோதாவிடம் மதிய உணவு கேட்டுள்ளார். இதற்கு வினோதா தனது மாமியாரை திட்டியுள்ளார். இதுகுறித்து கஸ்தூரி தனது மகன் ஸ்ரீகாந்த்திடம் தெரிவித்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் தங்கள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயின் வாயில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கண்ணப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் ஸ்ரீகாந்த் மற்றும் மனைவி வினோதா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.