Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீடிரென கேட்ட அலறல் சத்தம்…. குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. பெரம்பலூரில் பரபரப்பு….!!

குடும்பத்தகராறு காரணமாக தாய் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சத்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுபஸ்ரீ என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சுகந்தி தனது குழந்தையுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து இருவரின் அலறல் சத்தத்தையும் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து சென்று தாய் மற்றும் மகளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வி.களத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |