Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்தலாம்; ஆனால் ஒரு கண்டிஷன் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!

முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புள்ள சிவப்பு பகுதியை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்து பகுதிகளையும் பச்சை மண்டலமாக மாற்றுவது மக்கள் கையிலேயே உள்ளது என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று குறைந்தால் மட்டுமே தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3ஆக பிரித்து பணி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என உத்தரவிட்டுள்ளார்.

வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைப்பொருட்கள் கொண்டு செல்வதை யாரும் தடுக்கக் கூடாது. விவசாய பணிகளுக்கு பொதுமுடக்கத்தில் முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது, எந்த தடையும் செய்யக்கூடாது என கூறியுள்ளார். காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். எண்ணெய், ஜவ்வரிசி, முந்திரி உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் நடைபெற ஆட்சியர்கள் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |