Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் – அமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.

இதனால் தான் தேர்வு தேதி தள்ளி வைக்கப்படுமா ? அல்லது தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற ஒரு சந்தேகம் எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த போது, தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தான் இந்த ஆலோசனை நடைபெறுகின்றது. தேர்வு தேதியில் மாற்றமில்லை, இந்த எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறித்த ஆய்வுக்காக தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது என்று விளக்கம் அளித்திருக்கிறார். இதனால் 10ஆம் வகுப்பு தேர்வு உறுதியாக நடைபெறும் என்று தெளிவாகிறது.

Categories

Tech |