திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது.
இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மாணவி வைஷ்ணவி தாயார் விருத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தனது மகளை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ததாக வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில் இரு வீட்டார் சம்மதத்துடன் தான் குழந்தை திருமணம் நடைபெற்றது என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மணமகன் மணமகள் வீட்டார் உட்பட பத்து பேரை வடமதுரை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.