Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 146 பேரும் முழுமையாக குணமடைந்தனர்: மாவட்ட ஆட்சியர்!!

கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என வர கூறியுள்ளார்.

அதேபோல, பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிகாரிகள் அனுமதி பெறாமல், முறையான பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்த சுமார் 4,000 பேர் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் வழிமுறைகளை மீறி அவர்கள் பொதுவெளியில் நடமாடுவதாக தகவல் பெறப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, கோவைக்கு விமானம் மூலம் வந்த 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Categories

Tech |