Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி மகளிர் டி20 தரவரிசை : இந்திய அணியின் இளம்புயல் ஷஃபாலி வர்மா முதலிடம்!

ஐசிசி வெளியிட்ட மகளிர் டி20 தரவரிசையில் இந்திய அணியின் ஷஃபாலி வர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. குரூப் A மற்றும் குரூப் B என்று லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் குரூப் A பிரிவில் இந்திய அணி இடம்பெற்று 4 லீக் போட்டிகளிலும் சிறப்பாக வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இந்திய அணிக்கு அடுத்த படியாக குரூப் A  பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் இரண்டாவதாக அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதேபோல் குரூப் B பிரிவில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Image result for Shafali Verma

இந்நிலையில் வருகின்ற 5 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. அதேநாளில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறயிருக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் தொடரை நடத்துகின்ற ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்கிறது.

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்தவர் யார் என்றால் அது ஒரு இளம் வீரர் ஷஃபாலி வர்மா தான். ஆம், 16 வயதான ஷபாலி வர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 15 பந்துகளில் 29 ரன்களை அதிரடியாக குவித்து வெற்றிக்கு வித்திட்டார். அதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மற்ற வீராங்கனைகள் சொதப்பிய போதும் , அதிரடி நாயகியாக 17 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார் .

Image result for Shafali Verma

இதேபோல் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் விளாசி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் ஆட்டநாயகி விருதைப் கைப்பற்றினார். இவரது துணிச்சலான அதிரடி ஆட்டம் தங்கள் மீதான அழுத்தத்தை குறைத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர் கேப்டன் ஹர்மன்பிதி கவூர் , ஸ்மிருதி மந்தனா போன்ற நட்சத்திர வீராங்கனைகள்.

 

ஒரு கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டு கனவைத் தொலைத்தவர் ஷபாலியின் தந்தை. ஆனால் எப்படியாவது தனது மகனை கிரிக்கெட் வீரராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். ஆனால் அவருக்கும் அது கைகூடாத நிலையில் தந்தை மற்றும் சகோதரர் இருவரின் கனவையும் இன்று நினைவாகி உள்ளார் ஷபாலி வர்மா .

தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட சென்றபோது பெண் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு ஷபாலி வர்மா கூந்தலை வெட்டி , ஒரு ஆணைப் போல தன்னை மாற்றிக்கொண்டு , சக வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். ஆண்களையே அலற விடும் இவரது தனித்துவமான ஆட்டத்தை கண்டு வியந்த ஹரியானா கிரிக்கெட் சங்கம், இவரை மாநில அளவிலான போட்டிகளில் விளையாட ஊக்குவித்தது. அங்கும் தனது பெயரை தடம் பதித்ததால் விரைவில் இந்திய அணிக்கு தேர்வான இவர் 15 வயதில் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சுமார் கால் நூற்றாண்டு காலமாக முறியடிக்க முடியாத சச்சின் சாதனையை தகர்த்தார்.

Image result for Shafali Verma

இதேபோல் உலக கோப்பையிலும் தனது மிரட்டலான ஆட்டத்தால் அவைவரது கவனத்தையும் தன்னை நோக்கி  ஈர்த்துள்ளார் இந்த இளம் நாயகி. இந்திய அணிக்கு ஒரு சிறந்த பிளேயர் கிடைத்து விட்டதாக புகழாரம் சூட்டுகின்றனர் சேவாக் போன்ற ஜாம்பவான்கள். இந்த சூழலில் ஐசிசி மகளிர் டி 20 போட்டியில் பேட்டிங் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் பேட்டிங்கில் ஷஃபாலி வர்மா 761 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஷஃபாலி இதுவரையில் 18 டி 20 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார்.

அதேபோல பவுலிங் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடம் பிடித்துள்ளார்.

 

 

 

Categories

Tech |