Categories
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேர், தென்காசியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 410 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 427ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பபேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 111 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 88 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பை எண்ணிக்கையானது 114ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |