Categories
அரசியல்

18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் விருப்பமனு…… அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு…!!

வருகின்ற 13_ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படுமென அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலின் போதே காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 13_ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்ள்ளது . இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் ,

வருகின்ற புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 25 ஆயிரம் விண்ணப்பக் கட்டண தொகையாக செலுத்தி கட்சியின் தலைமை அலுவலகத்தில் செலுத்தி விண்ணப்பம் பெறலாம் எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும்  விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அன்று மாலைக்குள் தவறாமல் திரும்ப வழங்க வேண்டும் என்றும் , திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டு விட்டதால் அவர்கள் மீண்டும் விருப்ப மனு அளிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |