Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : #INDvSA ஒருநாள் போட்டி மழையால் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்.!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிமழையினால்  ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து போட்டி மாலை 6: 30 மணிக்கு நடைபெறும் எனவும், 50 ஓவர் போட்டி 30 ஓவர் குறைக்கப்பட்டு 20 ஓவராக மாற்றப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வரை மழை விடாமல் பெய்து வருவதன் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. மழையினால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதால் மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

Categories

Tech |