Categories
உலக செய்திகள்

பிறந்த 5ஆவது நாளில் கொரோனா… ஒரே மாதத்தில் பச்சிளம் குழந்தையை குணப்படுத்திய சீன மருத்துவர்கள்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலகின் மிக குறைந்த வயது நோயாளியான 35 நாள் குழந்தை ஓன்று பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் இதுவரையில் மொத்தம் 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்பை விட தற்போது சீனாவில் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

சீன மருத்துவர்களின் அயராது பணியால் பலரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ஆம் தேதி பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு 5ஆவது நாளில் நுரையீரலில் கடுமையான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதை தொடர்ந்து அந்த குழந்தை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சிறப்பு மருத்துவர் குழுக்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஒருமாத காலமாக மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகு அந்த பச்சிளம் குழந்தை நோய் தொற்றில் இருந்து விடுதலை பெற்று, பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பிறந்த சில மணிநேரத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பெண் குழந்தை ஓன்று மருந்துகளின் உதவியின்றி குணம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |