4-வதாக பிறந்த பெண் குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செம்மனஅள்ளி கிராமத்தில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும், 3 பெண் குழந்தையும் இருகின்றனர். இந்நிலையில் அனிதாவிற்கு தற்போது 4-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை அடுத்து அந்தக் பெண் குழந்தை எதிர்பாராதவிதமாக திடீரென உயிரிழந்துள்ளது. இது தொடர்பாக ஆரம்ப சுகாதார உதவி மருத்துவர் முனிவேல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் குழந்தை மரணத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.