Categories
உலக செய்திகள்

பரிசோதனை நடத்தப்படவில்லை…. பிரிட்டனில் இந்திய மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?

பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசால் 104 பேர் பலியாகியிருப்பதுடன், பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2600ஐ தாண்டி விட்டது. மேலும் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டு 2626 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவின் கோர பிடியின் காரணமாக பிரிட்டனின் பவுண்டு மதிப்பு கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவை கண்டுள்ளது. கொரோனா இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் 330 பில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்குவதாக அறிவித்தார். இருந்த போதிலும் பவுண்டின் சரிவை தடுக்கவே முடியவில்லை.

இதனிடையே பிரிட்டனில் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டிருக்கும் 7 இந்திய மருத்துவர்கள் தங்களுக்கு  பரிசோதனை நடத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். இந்திய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஏராளமானோர் பிரிட்டனில் சேவை புரிந்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பிரிட்டன் அரசுக்கு மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Categories

Tech |