நாடு முழுவதும் 7 வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்து 60.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் முழுவதும் வருகின்ற 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இன்று நடந்து முடிந்த 7-ம் கட்ட வாக்குப்பதிவில் மொத்த 8 மாநிலங்களில் 60.21 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
1. பீகார் 49.92%, (குறைந்த பட்ச வாக்குகள்)
2. உத்தரபிரதேசம் 54.37%,
3. பஞ்சாப் 58.81%,
4. சண்டிகார் 63.57%
5. இமாச்சல பிரதேசம் 66.18%,
6. மத்திய பிரதேசம் 69.38%,
7. ஜார்க்கண்ட் 70.5%,
8. மேற்கு வங்காளம் 73.05%, (அதிகபட்ச வாக்குகள் )