ஆவின் நிர்வாகம் காலியான பால் உள்ளிட்ட கவர்களை முகவர்களிடம் கொடுத்து கவருக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மத்திய அரசு மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் நெகிழி பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விலக்களித்துள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எண்ணத்தில் ஆவின் நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் காலியான பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து சில்லறை விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சில இடங்களில் கொடுத்து 1 கவருக்கு 10 பைசா வீதம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்வதற்கு 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.