Categories
அரசியல்

பழமையான 141 சட்டங்கள் நீக்கம்….பேரவையில் சட்ட மசோதா தாக்கல் …!!!

தமிழகத்தில் பழமையான மற்றும் பயன்படாத 141 சட்டங்களை நீக்குவதற்கான  சட்ட  மசோதாவை  அமைச்சர் சிவி ஷண்முகம்  பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்ட பேரவை கூட்டத் தொடரில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்,தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமையான சட்டங்களை நீக்குவதற்கான சட்ட மசோதாவை  பேரவையில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் சில சட்டங்களின் பட்டியலை அனுப்பி ,அதில் எந்தெந்த சட்டங்கள் தற்போது தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்பதை கண்டறியுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து,மாநில சட்ட ஆணையமும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்க பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு மிகவும் பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாமல் இருக்கும் 141 சட்டங்களை நீக்க தாக்கல் செய்யபட்ட சட்ட மசோதா பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |