சீனாவில் லவ் பிரேக் அப் ஆன விரக்தியில் இளைஞர் ஒருவர் செய்த செயலானது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
சீனாவில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இளம்பெண் ஒருவரும் இளைஞரும் சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர் “அதான் பிரேக் அப் ஆயிடுச்சே இனி அவளுக்கு செலவு பண்ண காசை மட்டும் எதுக்கு சும்மா விடணும்” என்று எண்ணியுள்ளார். பின்னர் ஒரு நாள் இரவு நேரத்தில் தனது முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண் மாத்திரை சாப்பிட்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞர் முன்னாள் காதலியின் செல்போனை எடுத்துள்ளார். மேலும் லாக் போடப்பட்டிருந்த அந்த செல்போனை முன்னாள் காதலியின் முகத்திற்கு நேராக வைத்து பாஸ்வேடை எடுத்துள்ளார். அதன் பிறகு செல்போனில் அவருடைய அக்கவுண்டில் இருந்த ரூ.18 லட்சம் பணத்தை நைசாக தனது அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.
இதையடுத்து அதிகாலையில் எழுந்த அந்தப் பெண் செல்போனில் தனது அக்கவுண்டில் இருந்து ரூ.18 லட்சம் சென்றதற்கான மெசேஜ் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அந்த இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.