விவாகரத்து செய்த மனைவியை அன்பாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொன்ற முன்னாள் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவரது மகள் மஞ்சிதர் கவுர்.. 26 வயதுடைய மஞ்சிதரும், ககந்தீப் என்பவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.. திருமணத்துக்கு பின் மதுவுக்கு அடிமையான ககந்தீப் தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளான்..
இதையடுத்து ஓராண்டுக்கு முன்னர் மஞ்சிதர் தன்னுடைய கணவர் ககந்தீப்பிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து, பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்தபடி தந்தையுடன் வசித்து வந்தார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் மஞ்சிதர் பணியாற்றும் இடத்துக்கு சென்ற ககந்தீப் ஆசையாக பேசி தன்னுடன் வரும்படி அவரை அழைத்துள்ளான்.. இதையடுத்து மஞ்சிதரும் முன்னாள் கணவன் ககந்தீப்பை நம்பி அவருடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.. அதைத்தொடர்ந்து அங்கு மஞ்சிதரை ககந்தீப் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதற்கிடையே மஞ்சிதர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர், மஞ்சிதரின் தந்தை ஜஸ்விதருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகளை ககந்தீப் அழைத்து சென்றதாக கூறினார்.. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜஸ்விதர், ககந்தீப் வீட்டுக்கு விரைந்து சென்ற போது, அங்கு தனது மகள் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியழுதார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.. பின்னர் நடத்திய விசாரணையில், மஞ்சிதருக்கு 2ஆவது திருமணம் செய்ய தந்தை முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ககந்தீப், மஞ்சிதரை கொலை செய்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் ககந்தீப்பை போலீசார் தேடி வருகின்றனர்.