நாய்களை அரவணைத்து ஒரு மூதாட்டி பிள்ளைகளைப் போல் கவனித்து வருவது கேரள மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தெருவில் அலைந்து திரியும் நாய்களை பராமரித்து அரவணைத்து வருகிறார். அந்த வகையில் அந்த மூதாட்டி தற்பொழுது 60 நாய்களுக்கு தாயாக இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறார்.
தெருக்களில் சுற்றித் திரிந்த நாய்களை அரவணைத்து எடுத்து வந்த ருக்குமணியம்மா அதில் கால் ஊனமான காயம் அடைந்த நாய்களுக்கு சிகிச்சையும் அளித்து அந்த நாய்களை தன்னுடைய சொந்த பிள்ளைகளைப் போல் வளர்த்து வருகிறார். ஆனாலும் வெறி கொண்ட சில நாய்கள் அவரை கடித்தும் காயப்படுத்தி வருகின்றன. பொதுமக்கள் அந்த மூதாட்டிக்கு சிகிச்சையளிக்க உதவி வருகின்றனர்.