Categories
சினிமா தமிழ் சினிமா

1990இல் போட்டியாக உருவான நடிகர்… அவருக்கு பயந்து ஓடினேன்…  ட்விஸ்ட் வச்சு பேசிய தளபதி…!!

நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எந்த போட்டி வந்தாலும் எது வந்தாலும் உங்கள் கண்ணில் பயத்தை பார்த்ததே இல்லை, உங்களை தேடி வரும் போட்டிகளை எல்லாம் நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள் என கேள்வி கேட்கப்பட்டபோது, 1990-களில் போட்டியாக எனக்கு ஒரு நடிகர் உருவானார். முதலில் போட்டியாளராக இருந்தார். பிறகு சீரியஸான போட்டியாளராக மாறினார். அவர் மேல், அவரின் வெற்றி மேல் இருந்த பயத்தால் நானும் ஓட ஆரம்பித்தேன். நான் போகும் இடத்திற்கு எல்லாம் அவரும் வந்து நின்னாரு. நான் இந்த அளவிற்கு வளர காரணமாக இருந்தாரு. அவரை தாண்டும் முயற்சியில் நானும் போட்டி போட்டுக் கொண்டே இருந்தேன். அந்த மாதிரியான போட்டியாளர் உங்க வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.

அந்த போட்டியாளர் உருவான வருடம் 1992. அந்த போட்டியாளரின் பெயர் ஜோசப் விஜய். ஜெயிக்கணும் என்ற எண்ணம் இருக்கிற அனைவருக்கும் போட்டியாளர் இருக்க வேண்டும். அந்த போட்டியாளர் நீங்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு நீங்க தான் எதிரி, நீங்க தான் போட்டி. நீங்க அடுத்தவங்கள அந்த மாதிரி பார்க்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்கள் உயரம் என்ன என உங்களுக்கே தெரியாமல் போய்விடும். உங்களுடன் முழுமையாக இருங்கள், அது மட்டுமே போட்டியைத் தாண்டி சிறப்பாகச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் மேலே நின்று வீடியோ எடுத்து அதனை தனது ட்விட்டர் அட்மினிடம் #என்நெஞ்சில்குடியிருக்கும் என்ற ஹாஷ்டாக் உடன் ட்விட்டரில் பகிருமாறு தெரிவித்தார். மானசி, சிம்பு, அனிருத் உள்ளிட்டோர்களுக்கு பாட்டு பாடியதற்காக நன்றி தெரிவித்தார். இறுதியாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Categories

Tech |