அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், தல அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஒரு ஆசை இருக்கும்.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் ”வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த படத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ், அல்லது பிரசன்னாவை நடிக்க வைக்கலாம் என்று அஜித் கூறினார். ஆனால், இயக்குனர் வினோத் சில நாட்கள் கழித்து அஜித்திடம் ‘செட் ஆகாத பீல்’ போல் இருக்கிறது என்று அப்படத்தில் கார்த்திகேயாவை வில்லனாக நடிக்க வைத்தாராம்.