Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்! பாலியல் புகார் பின்னணியில் அந்த நடிகை தான் இருக்கிறார்….. நிவின் பாலி பட இயக்குனர் பரபரப்பு குற்றச்சாட்டு‌……!!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் நடிப்பில் சமீபத்தில் படவேட்டு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது‌. இந்த படத்தில் அதிதி பாலன் ஹீரோயின் ஆக நடிக்க, நடிகர் சன்னி வெயின் தயாரித்துள்ளார். இப்படத்தை லிஜூ கிருஷ்ணா இயக்கியுள்ளார்‌. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் மீது துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தினார். இதனால் படவேலைகள் கிடப்பில் போட பட்ட நிலையில், இணை இயக்குனர் ஒருவரால் படத்தின் மீதி காட்சிகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் லிஜு கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, என் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களுக்கு காரணம் நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் தான். இவர்தான் பாலியல் புகார்களுக்கு பின்னணியில் செயல்பட்டு வருகிறார். இவர் சினிமா பெண்கள் நல அமைப்பு பெற்ற பெயரில் எனக்கு மன ரீதியான டார்ச்சர் கொடுத்து வருவதோடு மிரட்டியும் வருகிறார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நடிகர் நிவின்பாலியை இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக நான் கதை சொல்லி ஒப்பந்தம் செய்தேன். அதன் பிறகு மரியாதை நிமித்தமாக கீது மோகன் தாசிடமும் நான் கதையை கூறினேன்‌. ஏனெனில் அந்த சமயத்தில் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், அவருடைய கணவர் ராஜீவ் ரவி இயக்கத்தில் ஒரு படத்திலும் நிவின் பாலி நடித்துக் கொண்டிருந்தார். இதனால்தான் ஒரு மரியாதை நிமித்தமாக அவர்களிடமும் கதை கூறினேன். ஆனால் கீது மோகன்தாஸ் என்னிடம் கதையில் சில மாற்றங்களை செய்யுமாறு கூறினார்‌.

அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் கீது மோகன்தாசுக்கு ஈகோ பிரச்சனை ஆரம்பமானது. என்னுடைய படத்தை எடுக்க விட மாட்டேன் என்று என்னிடம் சவால் விட்டார். அதுபோன்று தற்போது என்னுடைய படம் முடிவடையும் வேலையில் பாலியல் புகாரை சுமத்தி என்னுடைய பெயரை டேமேஜ் செய்து விட்டார். மேலும் இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும். நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். அது தொடர்பான ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது என்று கூறினார்.

Categories

Tech |