தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வருபவர் பன்னி வாசு. இவர் கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு பல சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். தெலுங்கு திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் பன்னி வாசு மீது துணை நடிகை சுனிதா போயா தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதோடு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகிறார். கடந்த மே மாதம் தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன்பாக அரை நிர்வாண போராட்டத்தில் சுனிதா ஈடுபட்ட நிலையில், நேற்று திடீரென தயாரிப்பாளரின் அலுவலகத்தின் முன்பாக நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார்.
தன்னை ஏமாற்றிய தயாரிப்பாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் வரை நான் போராட்டத்தை விட மாட்டேன் என்று சுனிதா கூறியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுனிதாவின் உடைகளை பெண் போலீசார் அணிய வைத்துள்ளனர். அதோடு தயாரிப்பாளர் ஹைதராபாத்தில் இருந்து வந்த பிறகு அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுனிதா தயாரிப்பாளரின் தொல்லை தாங்க முடியாமல் 4 முறை மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.