நெசவாளிகளின் வாழ்க்கையை விவரிக்கும் தறி தொடரை நடிகை லலிதா குமாரி தயாரிக்கிறார்.
மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை லலிதா குமாரி ஆவார். காமெடி வேடங்களில் நடித்த இவர் நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகியே இருந்தார். இவர் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தறி ‘என்ற’ தொடரை தயாரித்துவருகிறார். இந்த தொடர் மூலம் நெசவாளிகளின் கஷ்ட, நஷ்டங்களை மக்கள் அனைவரும் அறியவேண்டும் என்பதே இத்தொடர்களின் நோக்கமாகும்.
இது குறித்து நடிகை லலிதா குமாரி கூறுகையில் இத்தொடருக்காக இரண்டு வாரம் நெசவாளர்களுடன் தங்கி அவர்கள் எவ்வாறு நூலை எடுக்கிறார்கள், அதை எவ்வாறு காயவைக்கிறார்கள் பின்பு அதற்கு எப்படி சாயம் பூசுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு இத்தொடரை தயாரித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இத்தொடர் மூலம் மக்களின் பார்வை நெசவுத்தொழில் மீது திரும்பும் என்று நம்பப்படுகிறது.