ஆப்கான் நிதியமைச்சகம் வெளிநாடுகளின் நிதி உதவியின்றி முதன் முறையாக புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம், பசி தலைவிரித்தாடி கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு நிதி அமைச்சகம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக முதன் முறையாக வெளிநாடுகளின் நிதி உதவியின்றி புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. அந்த பட்ஜெட் வருகின்ற 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அகமது வாலி ஹக்மல் இந்த பட்ஜெட்டுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற இருப்பதாகவும், நிதியை உள்நாட்டு வருவாயிலிருந்து பயன்படுத்த முயற்சி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த புதிய பட்ஜெட் 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 4-ல் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என்று பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த ஆப்கான் பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.