Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆக்ரோஷமாய் சீற வரும் “கே.டி.எம் டியூக் 790” … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான  டியூக் 790   இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790  மோட்டார் சைக்கிள்  இந்தியாவில் இந்த ஆண்டின்   பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது   .மேலும்  இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இந்த  மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது .

 

Image result for ktm duke 790

 

 

இந்நிலையில் ,  தற்போது  200-க்கும் குறைவான வாகனங்களே இருப்பதால், டியூக் 790 மடலின்  உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டு, புதியதாக கே.டி.எம் டியூக் 890 மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட உள்ளதாக  கூறப்படுகிறது. மேலும் , கே.டி.எம். டியூக் 790 மாடலில் LC98 799சிசி லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது .

Image result for ktm duke 790

இது 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , கே.டி.எம். டியூக் 790 மாடலில் 43 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், WP அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , பிரேக்கிற்கு முன்புறம் டூயல் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .

Image result for ktm duke 890

புதிய கே.டி.எம். டியூக் 890 பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் 790 வேரியண்ட்டை விட 15 பி.ஹெச்.பி. கூடுதல் திறன் வழங்கும் என்றும்   பிரேக்கிங் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்களில் அப்டேட் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் , இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 விலையானது  ரூ. 7.5 லட்சம்  என அந்நிறுவனம் கூறியுள்ளது .

Categories

Tech |