ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட கவுன்சிலர் பதவியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இன்று காலை 8 மணி முதல் பத்திரமாக எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30,354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவி போட்டியில் அதிமுக முன்னிலை வகித்து வருகின்றது. திமுக நெருங்கி வருகின்றது. ஆனால் தற்போது வரை திமுகவால் முந்தி செல்ல முடியவில்லை.
தொடர்ந்து வாக்கு எண்ணப்பட்டு வருகின்றது. தற்போது 6:45 மணி நிலவரப்படி அதிமுக முன்னிலையில் உள்ளது. இதனிடையே நாளை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…
முன்னிலை நிலவரம்..!
மாவட்ட கவுன்சிலர் – 298 / 515
திமுக+ – 150
அதிமுக+ – 164
அமமுக – 2
நாம் தமிழர் – 0