நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 2021ஆம் அதிமுகவை அகற்றுவதற்கான முன்னோட்டம். இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு முறைகேடு ஊழல் நடந்துள்ள இந்த ஆட்சியை அகற்ற வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தால்கூட இத்தனை திட்டங்களை நிறைவேற்ற முடியாது. ஆனால் பாஜவின் முகமூடியாக இருக்கும் அதிமுக அரசு ஆர்எஸ்எஸ் விருப்பத்தை நிறைவேற்றி வருகின்றது. இந்த மாநில அரசு நீக்கப்பட வேண்டும் என நாங்கள் முக்கியமாக கூறுவது அவர்கள் செய்துவரும் ஊழல்.இதில் சிதம்பரம் வழக்கில் காட்டும் தீவிரத்தை எடப்பாடி வழக்கில் சிபிஐ காட்டவில்லை. காரணம் சிதம்பரம் போராளியாக இருக்கிறார். எடப்பாடி பணிகிறார். ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு லட்டு போன்றவர் என்று தெரிவித்தார்.