இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது .
அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற குழுவானது கடந்த ஜனவரி 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டது . அந்தக் குழுவில் அஇஅதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் , முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , அமைச்சர் ஜெயக்குமார் , சிவி சண்முகம் , சட்டமன்ற உறுப்பினர் செம்மலை உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
இந்த குழு தயாரித்த தேர்தல் அறிக்கையில் வரைவை மார்ச் 1ஆம் தேதி அதிமுக_வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரிடம் சமர்ப்பித்தார்கள் . 130 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கை வரைவு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கூட்டங்கள் நடத்தி பல்வேறு தரப்பினரும் கருத்து கேட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இருக்கின்றது . இதில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் .
இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது . பல்வேறு தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்கள் , முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .