சென்னை விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். அவரை அழைத்து அவரது உடைமைகளை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, அலுவலர்கள் திடுக்கிடும் விதமாக 12 கங்காரு எலிகள், 3 தரை நாய்கள், 1 சிவப்பு அணில், 5 பல்லிகள் உள்ளிட்ட அரியவகை வன உயிரினங்களை சிறு சிறு பெட்டிகளில் அடைத்து அந்த நபர் கடத்திவந்தது தெரியவந்தது. விலங்குகளை மீட்ட நுண்ணறிவுப் பிரிவினர், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட விலங்குகள் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.