Categories
உலக செய்திகள்

50 ஆண்டுகளில் பாலைவனமாகும் அமேசான்… எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

உலகின் மிகவும் அதிகமான  தாவரங்கள் மற்றும் விலங்குகளை கொண்டுள்ள இடங்களில் ஒன்றான அமேசான் காடு புவி வெப்பமடைதலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளில் அமேசான் காடுகள் அழிந்து விடலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகின் அதிக விலங்குகளையும், செடி வகைகளையும் கொண்டுள்ள மற்றுமொரு இடமான கரீபியன் பவளப்பாறைகளும்  15 ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலக வெப்பநிலை மேலும் 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பவளப்பாறைகளில் பெரும்பாலானவை அழிந்து போய் விடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமேசான் வனப்பகுதி காடுகளை அழிப்பதால் பவளப்பாறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தண்ணீரை மாசுபடுத்துவதன் மூலமும், காற்றில் உள்ள கரியமிலவாயு கடல் நீரில் கலப்பதன் மூலமும் பவளப்பாறைகள் அழிந்து கொண்டே வருகின்றன.

இதன் காரணமாக மனித இனங்கள் மற்றும் பிற உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அமேசான் காடுகளில்  35% காடுகள் அழிக்கப்பட்டால், அது முற்றிலுமாக அழிக்கப்படும் நிலை ஆரம்பமாகி விடும் என்றும் அவர்கள் கூறினர். 7 நாடுகளில் பரவியிருக்கும் அமேசானின் காடுகளில் 20 சதவீதம் ஏற்கனவே அழிந்து விட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories

Tech |