இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயளாலர் டி ராஜா கூறுகையில், “அமெரிக்க ராணுவத்தால் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கச்சா எண்ணெய் பெரும் உயர்வை சந்தித்துள்ளது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைக்கு பெரும்பாலும் ஈரானையே சார்ந்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் இந்தியாவை பெரிதும் பாதிப்படையச் செய்திருக்கிறது. எனவே, இந்தியா அமெரிக்காவை கண்டிக்க வேண்டும்.
மாறாக, தற்போது அமெரிக்காவுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராகவே உள்ளது. இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றவில்லை. மோடி அரசினால் இந்தியாவின் நன்மதிப்பு கெடுகிறது” என்றார்.
மேலும், அமெரிக்கா சென்ற நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குதான் தேர்தல் பரப்புரை செய்தார் என்றும் அவர் விமர்சித்தார்.