வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் ஜோ பைடன் ஆதரவாளர்களுக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே போராட்டங்கள், மோதல்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளதால், அவர் அதிபராக இன்னும் 6 வாக்குகளை மட்டும் பெற வேண்டும். ஆனால் டிரம்ப் இன்னும் 60 வாக்குகளை பெற வேண்டிய சூழல் உள்ளது.
STOP THE COUNT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 5, 2020
இந்த நிலையில் தான் அவர் ஏற்கனவே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த வகையில் தற்போது மிரட்டல் விடுக்கும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு வல்லரசு நாட்டின் அதிபராக கூடியவர் அந்த நிலையை மறந்து, மிரட்டல் விடுக்கும் தொனியில் வார்த்தையை பயன்படுத்தி இருப்பது பலருக்கும் வினோத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஸ்டாப் த கவுண்ட் என்ற ட்ரம்ப் பதிவு அமெரிக்காவினுடைய மக்களாட்சி கிடைத்து இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.