இரு சிங்கங்கள் வளர்த்தவரையே அடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிம்போபோ மாகாணத்தில் வெஸ்ட் மேத்யூசன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் லயன் ட்ரீ டாப் லாட்ஜ் என்ற விடுதி ஒன்றை நடத்தி வந்தனர். இந்த விடுதியில் பல்வேறு விலங்குகள் பாதுகாப்பாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு வெள்ளை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட விடுதி வளாகத்துக்குள் மேத்யூசன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது விடுதியில் வளர்க்கப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்த 2 வெள்ளை சிங்கங்கள், எதிர்பாராத விதமாக தாக்கியதில் மேத்யூசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, மேத்யூசனால் வளர்க்கப்பட்ட சிங்கங்கள் தற்காலிகமாக ஒரு முகாமுக்கு மாற்றப்பட்ட நிலையில், அவற்றிற்கு ஏற்றவாறு அமையும் சூழலில் விரைவில் விடப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.