Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று மாலை மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , ஒடிசா , சிக்கிம் மற்றும் ஜம்முகாஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்து விவாதிகப்படுகின்றது.

மேலும் இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்ட பேரவை தேர்தல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்த ஆலோசனையில் இது குறித்தும் விவாதிக்கப்பட்டு பல முக்கிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடப்படுகிறது . மேலும் முக்கியமானதாக பார்க்கப்படும் மக்களவைத் தேர்தல் எப்போது நடைபெறும் , எத்தனை கட்டமாக நடைபெறும் , எந்தெந்த தேதிகளில் நடைபெறும் , எந்தெந்த மாநிலங்களில் நடைபெறும்  அறிவிக்கப்படும் தமிழ்நாடு , கேரளா , புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது . ஆகவே இன்று மாலை 5 மணிக்கு முக்கியமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது .

Categories

Tech |