குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அளித்து திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் போராட்டம் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் இந்தி மொழியை எதிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது.
அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்திற்குள் திமுகவின் தகவல் தொழில்நுட்ப குழுவினர் கருப்புக்கொடி ஏந்தி உள்ளே நுழைந்து அங்கே ரயில் பலகைகளில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து இந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதையடுத்து உடனடியாக ரயில்வே காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை அதிரடியாக கைது செய்தனர். இப்போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.