நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகின்றது.
நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு, ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கு தொடர்பான மனுக்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்கண்ட், புதுச்சேரி, பஞ்சாப், சதீஷ்கர் உட்பட ஏழு மாநில அரசுகள் சார்பாக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த காலத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என 7 மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துகிறது.