முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கைக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இதுகுறித்து கூறுகையில், ஐஎன்எக்ஸ் வழக்கின் ஆதாரங்களை பார்க்கும் பொழுது இவருக்கு ஜாமீன் கொடுத்தால் அது தவறான உதாரணத்தை மக்களுக்கு தெரிவித்துவிடும் என்பதை அடிப்படியாக கொண்டு டெல்லி நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்தது. ஆகவே டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தான் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.