Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு வேடிக்கை – முதல்வர் பழனிசாமி!

ஆர்.எஸ்.பாரதி கைது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலேயே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர்களை ஆர்.எஸ்.பாரதி ஆர்.எஸ்.பாரதி செய்த போதே ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும்.

இ- டெண்டரில் முறைகேடு என குற்றம் சாட்டியிருப்பது துளி கூட உண்மை இல்லை. அனுதாபம் தேட அரசு மீது ஸ்டாலின் பழி சுமத்தி வருகிறார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அரசு மீது அவதூறு பரப்பு வருகிறார் என்றும் முதல்வர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்த்தனர். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |