பொள்ளாச்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அம்புகள் தான் அதை இயக்கியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கொ.ம.தே.கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் முடிவாகியுள்ளது . மேலும்கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கும் தொகுதி எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி எது என்று முடிவு செய்யப்பட்டது .
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்திக்கையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்தார் . இது குறித்து அவர் கூறுகையில் , பொள்ளாச்சியில் ஆபாச படம் எடுத்த சில குற்றவாளிகளை கைது செய்திருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் அம்புகள் தான் அதை இயக்கியவர்களை இன்னும் கைது செய்யப்படவில்லை . அவர்களை எல்லாம் இயக்கியவர்கள் அதிகார மையத்தில் இருப்பதாக செய்திகள் வருகின்றன . காவல்துறை உண்மை குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான அந்த முயற்சியில் இறங்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றது . இது எல்லாம் பெண்களுடைய பாவம் ஆயிரக்கணக்கான பெண்கள் ஏமாற்றப்பட்டு ஆபாச படங்களை எடுத்து துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள் .
உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வில்லை என்று சொன்னால் தமிழகம் முழுதும் இருக்கின்ற மக்களுக்கு ஆட்சியின் மீது அவநம்பிக்கை வரும் என்பதில்லை கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது . இப்படிப்பட்ட குற்றம் செய்தவர்களை பாதுகாப்பதற்கு முயற்சிக்காதீர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந்தாலும் உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் உங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் குற்றவாளிகளை மறைத்து வைப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.