Categories
சினிமா தமிழ் சினிமா

நான் மிகவும் ரசிக்கும் கலைஞன்…. பிரபல வில்லனை புகழ்ந்த சேரன்…!!!

இயக்குனர் சேரன் பிரபல வில்லன் நடிகரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சேரன். இவர் தற்போது ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் ஜானகி, சிந்து, சுபா, மொட்டை ராஜேந்தரன், சௌந்தரராஜா, மதுமிதா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை சேரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், ஒரு குளோஷப் ஷாட் எடுக்கப்பட எத்தனை பேர் உழைப்பு, எவ்வளவு கூட்டத்தின் நடுவில் ஒரு நடிகன் தனது திறமயை, உணைர்வுகளை எந்த அச்சமும், பதட்டமுமின்றி காட்டவேண்டும். இங்கே டேனியல் பாலாஜி நான் மிகவும் ரசிக்கும் கலைஞன். முகத்தில் காண்பிக்கும் மாற்றங்கள் ரசித்துக்கொண்டே இருக்கலாம். வளரும் கலைஞன். என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CORXk22B33d/?igshid=wwht4ckdr2lc

Categories

Tech |