Categories
தேசிய செய்திகள்

பொறுக்கிகளிடம் இருந்து மீள ”நவீன உள்ளாடை” அசாம் பொறியாளர் கண்டுபிடிப்பு…!!

பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிப்பதற்கான நவீன உள்ளாடையை அசாம் பொறியாளர் உருவாக்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் பெண்கள், மாணவிகளுக்கு பணியிடம் , பொது இடங்கள் மட்டுமின்றி பேருந்து ரயில் போன்ற வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்கள் தப்பிக்கும் வகையில் அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட உள்ளாடையை அசாம் மாநிலம் கவ்காத்தியை சேர்ந்த பொறியாளர் உருவாக்கியுள்ளார்.

இந்த உள்ளாடை அணிந்திருக்கும் பெண்ணிடம் பொறுக்கிகள் யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்ய அத்துமீறினால் அந்த உள்ளாடையில் உள்ள கருவி மூலம் உறவினர்களின் செல்போன்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி சென்றடையும் என்றும், அதன் மூலம் அந்த பெண் எங்கே இருக்கிறார் என்று  ஜிபிஎஸ் கருவிகள் கண்டு பிடிக்க முடியும் என்றும் நவீன உள்ளாடையை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |