அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, ஏ.பி.டபிள்யூ தலைவர் அபிஜித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிவடிவம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டலின்படி நடக்கவில்லை.
இதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இணைய குற்றத்தில் (சைபர் க்ரைம்) ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் விசாரித்தோம். இரு வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உண்மையான அஸ்ஸாமியர் ஒருவருக்கு குடியுரிமை கிடைக்கவில்லை. ஆகவே, பிரதீக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.